ஹைக்கூ எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி போன்ற புத்தகங்களை எழுதியவர் சுஜாதா. நாவல் எழுதுவது எப்படி என்று புத்தகம் ஏதாவது எழுதியுள்ளாரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்தப் புத்தகத்தை அவரையே படித்துவிட்டு வரச் சொல்லலாம், அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால்.
ஓர் அறிமுக எழுத்தாளனின் முதல் நாவலைப் போல உள்ளதே தவிர, இது சுஜாதாவின் கதை போல தோன்ற வில்லை. ஏன் இப்படி உப்புச் சப்பில்லாத கதைக்கு சுமார் 280 பக்கங்கள் வீணடிக்க வேண்டும் எனத் தோன்ற வில்லை.
பொதுவாக சுஜாதா கதைகளில் டெக்னிகல் தவறுகள் இருக்காது. ஆனால் இக்கதையில் அப்படிப்பட்ட தவறுகள் உள்ளன. உயிரோட்டமில்லாத கதா பாத்திரங்கள், சுவாரசியமில்லாத நிகழ்வுகள் – மொத்தத்தில் சுஜாதாவின் மோசமான கதைகளில் இதுவும் ஒன்று.