Opinion & Quotes

“என்னென்று சொல்வேன்; என்னென்று சொல்வேன்;

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்” என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளைப் போல…

“என்னென்று சொல்வேன்; என்னென்று சொல்வேன்;

ஓவியத்தால் மணியம் தகுதி பெற்றதும்

ஓவியம் மணியத்தால் தகுதி பெற்றதும்” எனச் சொல்ல தோன்றுகிறது.

பிரபஞ்சத்தைப் படைத்தான் பரமன். அந்தப் பரமனையே தமது தூரிகையால் படைத்தார் மணியம். லலித் கலா அகாடமியில் இன்று நான் கண்டவை வெறும் ஓவியங்களில்லை.

பரமனைக் கண்டேன்; ஒப்பில்லா பேரழகு வாய்ந்த பரமனைக் கண்டேன். எழில் கொஞ்சும் அவன் மனையாளைக் கண்டேன். தெய்வத் தம்பதியரின் இணக்கத்தைக் கண்டு பூரித்தேன்.

மைதிலிக்கு வில் வளைக்கக் கற்றுத் தந்த மனங்கவர் ராமனைக் கண்டேன்.

தேவர், கந்தர்வர், வனப்பு மிகு மகளிர், அழகு மயில், செழிப்பான வனங்கள் இன்னும் பல ஓரிடத்தில் இருக்கக் கண்டேன்.

பூங்குழலியையும், வந்தியத்தேவனையும், நந்தினியையும், குந்தவையையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

பல்லவன் கலையும் சோழன் கலையும் ஒரு சேர ஒருவர் தூரிகையால் மறு பிறவி எடுத்த அதிசயத்தைக் கண்டேன்.

கலை மகளுக்குத் தான் என்னவொரு ஓர வஞ்சனை. ஒரே குடும்பத்தில் தன்னுடைய அருளை முழுவதுமாகச் செலவழித்து விட்டாளே. மணியத்தின் ஓவியங்களைச் சுவைத்துத் திருப்தியுடன் வெளியில் வந்தால், அவருக்கு நிகரான மணியம் செல்வனின் ஓவியங்கள். ஒரே கூடத்தில் இரண்டு பிரம்மாக்கள்.

*******************************************************************************************************************

Regardless of the multitude of individuals indifferent to their own strength, affiliations, or community ties, when confronted with injustice, I have consistently chosen to confront and question without reservation. In most cases, the affected party has been a stranger to me.

From my college days onward, I have actively participated in blood donation, provided various pro bono services, and donated personal funds. These actions were undertaken without any desire for self-promotion, to the extent that the beneficiaries often remain unaware of the contributor’s identity.

Certain decisions, undisclosed for privacy reasons, have placed me in significant jeopardy, nearly jeopardizing my career or life. Nonetheless, I find solace in knowing that these choices have profoundly benefited numerous individuals.

Admitting without hesitation that in the past year, I have felt fatigued by such endeavors, my upcoming New Year’s resolution may involve refraining from engaging in social activities that cause personal distress. I will continue assisting those who seek my help, but I plan to refrain from voluntary involvement beyond what is reasonably expected.

*****************************************************************************************************************

எம்.ஜி.ஆரும் நானும்

சிவந்த நிறம், சுருள் முடி, இரட்டை நாடி (cleft chin) – எம்.ஜி.ஆர். வேடத்துக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேடம் ஏதோ ஒரு வட்டச் செயலாளரின் மகனுக்குப் போய் விட்டது. என்னைக் கடற்கரையில் உள்ள ஒரு தலைவரின் சிலையாக நிற்க வைத்துவிட்டனர். எம்.ஜி.ஆராகத் தோன்றிய ஒரே காரணத்துக்காக அந்தச் சிறுவனுக்கு மட்டும் பரிசு மழை. மூன்றாம் வகுப்பிலேயே அரசியலின் அடிச்சுவடி எனக்குப் புரிய இந்தச் சம்பவம் உதவியது.

நான்காம் வகுப்பு – திருநெல்வேலி தெற்குப் புதுக் தெருவில் மக்கள் வெள்ளம். அந்த வெள்ளத்தில் சிறு துளியாக நான். இருளைக் கிழித்துக் கொண்டு ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடன் ஒரு முகம் சில நொடிகள் தோன்றி மறைந்தது. ஆச்சரியத்தில் விரிந்த என் கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு மணி நேரமானது.

ஐந்தாம் வகுப்பு – கனவுகள் காணாத எனக்கொரு கெட்ட கனவு. பதற்றத்துடன் விழித்தெழுந்தேன். இது உண்மையா – இப்படி நடக்குமா – யாரிடம் கேட்பது? இறைவன் இறந்து விட்டதாகக் கனவு. சில நிமிடங்களில் வானொலியில் செய்தி – எம்.ஜி.ஆர் மறைந்து விட்டார்.

ஆன்மிகம், அரசியல் நிலைப்பாடு, உடற்பயிற்சியில் ஆர்வமின்மை, சைவ உணவை மட்டும் உட்கொள்ளுதல், இன்னும் சில விஷயங்களில் எம்.ஜி.ஆருடன் எனது குணாதிசயம் மாறுபட்டது. ஆயினும் ஆரம்பக் காலத்திலிருந்து அவருடைய வாழ்விற்கும் என்னுடைய வாழ்விற்கும் உள்ள சில ஒற்றுமைகள் அவரை அவ்வப்போது நினைவு கொள்ள வைக்கிறது. சிறு வயதில் தந்தையை இழந்தது, இளமையில் வறுமை, வாய்ப்புக்காக அலைந்தது, 40 வயதைத் தாண்டியே வெற்றியைச் சுவைப்பது, இன்னும் பல.

எம்.ஜி.ஆர். இயக்கிய படங்களை வேறு யாரோ இயக்கினார், அவருக்கு நடிக்க மட்டுமே தெரியும் எனக் குறை சொல்வோர் உண்டு. ஆனால் உண்மையில் தாம் நாயகனாக நடித்த ஒவ்வொரு படத்தின் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து ஆராய்ந்து முடிவெடுத்தவர் அவர். சினிமாவின் அனைத்து விஷயங்களும் அத்துப்படி. இவர் நடித்த படங்களுக்கு இயக்குனர்கள் பெயருக்குத் தான் – இவர்தான் உண்மையான இயக்குனர். இந்த விஷயத்திலும் எனது வாழ்க்கை இவருடன் ஒத்துப் போகிறது. குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை.

இவருடைய இளமைக்காலக் கசப்பு அனுபவங்கள், இவர் அனைவரையும் வயிராற உணவளிக்கத் தூண்டுகோலாக அமைந்தது. அதைப்போல் எனக்கு நேர்ந்த அனுபவங்கள், அனைவரையும் சமமாக மதிப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. மற்றவர்களுடைய வயிற்றில் அடிப்பவர்களை இவர் என்றும் மன்னித்ததில்லை. அதைப்போல மற்றவர்களை அவமதிப்பவர்களை நான் என்றும் மறப்பதில்லை.

வளர்ச்சியைக் கண்டு முகம் சுளிப்பவர்களுக்குத் தெரியாது – எம்.ஜி.ஆராய் வாழும் வலி. போராடி வெல்பவர்களுக்குத்தான் தெரியும் வாழ்வின் உண்மையான சுவையும், அதை அடைய ஏற்பட்ட வலியும் வடுக்களும். எம்.ஜி.ஆராய் இருப்பது சுலபமில்லை. இந்தக் கிருஷ்ணகுமாராய் இருப்பதும் சுலபமில்லை.

என்னவெல்லாம் இருந்தாலும்….இவருடைய முகக் கவர்ச்சி – அதில் கோடியில் ஒரு பங்கு கூட என்னிடம் இல்லை. (நாம தப்பித்தவறி தேர்தல்ல நின்னா, மைனஸ்ல தான் நமக்கு ஓட்டு விழும்….நம்ம முகரக்கட்டை கவர்ச்சி அந்த ரேன்ஜுல இருக்கு.)

***********************************************************************************************************************

I’ve engaged in self-critique and self-deprecating humor countless times in the past. Now, for a refreshing change…

Throughout my life, I take pride in consistently and consciously adhering to certain principles. I treat everyone with equal respect, listen attentively to each person, and play the perfect host for everyone. Even when addressing a group, I make a point to look at everyone’s face as I speak. Caste, religion, nationality, gender, ideology, language, color, education, professional qualification, public status, financial status—none of these matter to me. Everyone is equal in my eyes.

*********************************************************************************************************************

I see myself as the Sahadeva of Mahabharata. Reflecting on my years, I’ve offered crucial advice to over a hundred people on personal, financial, professional, and career matters. Some found love, others averted separation; some made successful investments, while others dodged risky decisions; a few soared up the career ladder. It may sound amusing, but it’s true. Even to those who betrayed me, I’ve given heartfelt advice, akin to Sahadeva counseling Duryodhana in the final battle. Somehow I am unable to resist offering sincere guidance to anyone seeking it. But, I remain as the ordinary Sahadeva forever.

*********************************************************************************************************************
Rama should never become Ravana; but there is no harm in aspiring to become Krishna. Right?

********************************************************************************************************************

My only prayer to God is to surround me with virtuous people who inspire me to grow, even if it means feeling a little ashamed of myself.

*******************************************************************************************************************
In my absence, some unexpected guests graced our home with their presence. Among them, a rather audacious individual took it upon themselves to inquire about my elderly mother’s age. To my delight, my younger daughter responded with remarkable wit, saying, “I will not tell you!” It seems she has a natural talent for handling such questions, perhaps even surpassing her father in style and poise.

******************************************************************************************************************

In my life, righteousness and faith in God are deeply intertwined. When faced with a choice, I will always choose to live by the principles of righteousness.

******************************************************************************************************************

Ah, let’s take a walk down memory lane, shall we? Back in the golden age of my IT career initiation, weekends were just extra workdays in disguise. Oh, the thrill of staying put at the office, becoming one with your desk – a timeless tradition! It was practically etched in the stone tablets of workplace conduct. But oh, how the times have danced to a new tune! Nowadays, summoning folks to the office for a bit of good ol’ work has transformed into an epic saga. A challenge, one might say. How the mighty have fallen!

******************************************************************************************************************

Oh, here’s a little dose of reality TV – ever noticed the spectacular synchronicity between prize winners and the award-givers? What a spectacular spectacle! And let’s not forget the benevolent ballet of donors and recipients, all elegantly swiveling their heads in perfect harmony towards the camera. Bravo! Such a natural and unscripted phenomenon, isn’t it?

******************************************************************************************************************

Ah, gather ’round for some wisdom! You know how they say, “Make sure everyone’s aware when you slip up, but let your virtuous deeds dance in the shadows”? Now, as for the clever mind dropping these gems, I’ll give you a hint – it’s someone not exactly keen on claiming the limelight. You catch my drift? 😀😝

******************************************************************************************************************

Oh, absolutely delightful! Because, you know, it’s abundantly clear that to fully grasp the intricacies of what modern Tamil speakers are saying, the audience should totally hold a master’s degree in English literature. Because, why not, right? The blending of languages is just a walk in the park for everyone. Genius!

******************************************************************************************************************

People often pester me with the classic question: “How on earth do you manage to keep up with regular blogging?”

Well, gather ’round, curious souls! Picture this: a non-smoking, teetotaling, party-skipping, cricket-ignoring, small-talk-resistant individual who’s no TV addict. You’re probably thinking, “What’s left?” But fear not, for I shall unravel the mystery of my leisure hours. And guess what? When stress comes knocking, blogging swoops in like a superhero – my trusty stressbuster!

******************************************************************************************************************

தாமிரபரணியில் அதிகாலையில் குளித்து நதிக்கரையில் உள்ள சிவன் கோவிலில் தொண்டு புரிந்து, எப்போதும் பரமேஸ்வரனை மட்டுமே தியானம் செய்து கொண்டு நதிக்கரையிலேயே காலம் தள்ள ஆசைதான். ஆனால், பற்றற்ற வாழ்க்கையில் பற்றிருந்தாலும், பற்றிக் கொண்ட வாழ்க்கையைப் பறி கொடுக்க இயலாது.

******************************************************************************************************************

Once upon a time, I was a book-devouring champion, reading one book every single day. Then life decided to switch up the rhythm, and my pace cooled down to a week, then a month per book. And now, hold your literary horses, it’s been a whopping four months since a book saw the light of my day. Life’s doing its thing! Oh, and speaking of brainy aspirations, despite wrestling with countless hefty books, my IQ’s decided to stay camera-shy. Can you believe the nerve? But hey, who needs all those IQ points anyway, when you’ve got a personality as dazzling as mine, right? 😉

******************************************************************************************************************

There’s a speaker all set to introduce a particular subject. But wait, there’s more! Another speaker steps in to introduce the first speaker. Now, the burning question is, who’s going to introduce this second speaker? 😉

******************************************************************************************************************

I’ve observed this tendency among a few. They display an equal sense of appreciation for everyone, perhaps viewing this behavior as a virtuous form of encouragement. However, my perspective differs. While uplifting people might offer immediate advantages, it holds little value in the grand scheme of things. Instead, it’s more effective to offer constructive criticism and recommendations for areas that need improvement. Constructive feedback consistently outweighs insincere praises. Furthermore, I believe this approach contradicts the recognition that genuine high achievers and performers deserve. Shouldn’t they receive distinct treatment compared to those who haven’t fared as well?

******************************************************************************************************************

Oh, it’s truly a marvel to behold why folks generously part with their fortunes to claim those precious minuscule city flats. After all, who wouldn’t want to revel in the exquisite ambiance of scarce water and invigoratingly stagnant air? And the dearth of trees, well, it’s a small sacrifice for the privilege of navigating those charmingly overcrowded roads—perfect for testing one’s patience while attempting the art of walking or driving.

******************************************************************************************************************

உடையில் எளிமை என்பது படாடோபமான பகட்டான ஆடைகளை அணியாமல் இருப்பதாகும். இடத்திற்கேற்ற தகுந்த உடைகளை அணியாமல் இருப்பதன்று. கிழிந்த உடை, ரவுண்டு நெக் டீ ஷர்ட், அழுக்கான உடை, ரப்பர் செருப்பு – இதையெல்லாம் அணிந்து மேடைகளில் தோன்றுவதும், திரைகளில் தோன்றுவதும்…

******************************************************************************************************************

I occasionally make choices that aren’t always optimal, not because of incompetence, but due to my inclination to assist others, often resulting in neglect, disrespect, or personal setbacks. However, I find contentment in one unwavering decision: maintaining a distance from politicians. If I had pursued these connections, I could have effortlessly cultivated relationships with individuals spanning from mayors to influential figures within the current ruling party, even encompassing a former candidate for Chief Minister.

******************************************************************************************************************

The great epic, Mahabharata holds my thoughts captive every single day, and I find myself drawing parallels between its profound episodes and various occurrences in my personal, professional, social, and political spheres. I’m fueled by the ambition to eventually reinterpret this magnificent epic through my own lens, encompassing all these multifaceted aspects. My ultimate goal is to present this narrative in a manner that is effortlessly understandable and within reach of all individuals, irrespective of their financial constraints, ensuring it becomes a universally accessible treasure. But, my commitments….it will take ages to reach there.

******************************************************************************************************************

For me, the essence lies in discipline. I strive for the liberation of orderly and disciplined individuals from the hardships inflicted by disorganized and undisciplined individuals.

Discipline encompasses a spectrum that spans from adhering to punctuality, upholding traffic regulations, treating all with equanimity, fulfilling tax obligations conscientiously, excelling in roles of a dutiful child, partner, parent, and dedicated worker or employer. It extends to encompass equal access to education, healthcare, and comparable amenities, as well as the presence of robust public infrastructure and untarnished governance. In essence, discipline is the common thread that binds these diverse facets together.

My perspective aligns each aspect with the principles of discipline – a society marked by discipline shall encounter minimal hurdles. This, in turn, bestows upon a nation the laurel of absolute autonomy – a nation truly independent in its entirety.

******************************************************************************************************************

Possessing the power to peer into minds, decipher intentions, and predict actions with a striking 90% accuracy has been quite the journey for me. But let’s be honest, it’s less of a superpower and more of a fascinating curse. Unless you hold the key to steering or halting the course of events, embracing innocence might just trump the allure of this insight.

******************************************************************************************************************

சதிராட்டம் என்ற நாட்டியத்துக்குப் பரத நாட்டியம் எனப் பெயர் 1930களில் அல்லது 1940களில் ஏற்பட்டது என்றும், இப்புதுப் பெயரைச் சூட்டியவர்கள் என ஓரிருவரை அடையாளம் காட்டுவதும் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் வழக்கமாகிவிட்டது.

நமக்கு ஆராய்ச்சி செய்யும் அளவு அறிவில்லை. பரத நாட்டியத்தில் தேர்ச்சியில்லை. ஆயினும் இந்த எளியோனால் 1921யில் மறைந்த மஹாகவி, தாம் மறைவதற்குப் பல ஆண்டுகள் முன்பாக இயற்றிய பாடலை மேற்கோள் காட்ட இயலும்.

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே !

பரத நாட்டியக் கூத்திடுவீரே !

காட்டும் வையப் பொருளின் உண்மை

கண்டு சாத்திரம் சேர்த்துடுவீரே !

******************************************************************************************************************

பல எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் எழுதும்போதும் பேசும்போதும் செய்கின்ற இலக்கணப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றைக் காணுறும் போது எனது குருதி கொதிக்கிறது. இவர்கள் பிரபலமானவர்களாகவோ அறிவு ஜீவிகளாகவோ அறியப்படுவதால், காலப்போக்கில் இத்தவறுகள் சரியென்றே ஆகிவிடும். இத்தகைய தவறுகளைத் திருத்தும் நோக்கில் இத்தொடரைத் தொடங்குகிறேன்.

இதை நான் எழுதுவதால் நான் அனைத்தும் அறிந்த அறிஞன் என என்னை எண்ணிக் கொள்வதாக யாரும் கருதிவிட வேண்டாம். வலிய மனிதர்களின் அலட்சியத்தாலும் அறியாமையாலும் நேரும் தவறுகள் எளிய மனிதர்களைப் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே இதை நான் எழுதத் தலைப்பட்டேன்.

இதை ஆதரித்தோ எதிர்த்தோ எழும் பின்னூட்டங்களுக்கு என்னால் பதில் அளிக்க முடியாதென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#1 “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன?”

ஒருவன் – ஆண்பால்

ஒருத்தி – பெண்பால்

ஒருவன் என்பதை நோக்கிப் பெண்பாலாக ஒருவள் என மறந்தும் கூறலாகாது.

ஒருவள் என்றெல்லாம் தமிழில் வார்த்தை கிடையாது.

இனியும் “ஒருவள்” என்றெல்லாம் எழுதினால், தாங்கள் பெண் எழுத்தாளராக இருந்தால், தங்களை “மாமி” என விளிப்பதற்குப் பதிலாக “மாமள்” என விளிப்பேன். தாங்கள் ஆண் எழுத்தாளராக இருந்தால் தங்களுடைய துணைவியாரை “அண்ணி” என அழையேன். மாறாக “அண்ணள்” என்பேன்.

#2 தமிழிலும் வடமொழியிலும் புலமை வாய்ந்தவர்கள் பலரும் செய்யும் தவறு இது. பல பழைய தமிழ் ஏடுகளிலும் சில கல்வெட்டுகளிலும் இதைக் காணலாம். “சிலவு” என்ற வார்த்தைப் பிரயோகம்.

வருவதால் வரவு. செல்வதால் செலவு. இதில் எப்படிக் குழப்பம் ஏற்படும்? சிலவு என்று வார்த்தை தமிழில் கிடையாது. கல்வெட்டில் இருந்தாலும் எந்த அறிஞரின் கருத்தாக இருந்தாலும் இது தவறென்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை.

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்

நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்

தன்மை முன்னிலை படர்க்கை என்னும்

அம்மூ விடத்தும் உரிய என்ப.

தொல்காப்பியம்.

#3 தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

– குற்றாலக் குறவஞ்சி

அருவி என்பது எவ்வளவு பழைமையான தமிழுக்கே உரித்தான சொல் என்பதற்கு இப்பாடல் ஓர் உதாரணம்.

அருவி என்ற அருமையான சொல்லிருக்க ஆங்கிலத்திலிருந்து கண்மூடித்தனமாக மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என “நீர் வீழ்ச்சி” என்ற சொல்லை உருவாக்கிய அறிஞர் யாரோ?

#4 சுவர் + இல் = சுவரில்

சுவரில் என்ற வார்த்தையை “சுவற்றில்” என எழுதுவது தமிழ் எழுத்தாளர்களுக்கே உரிய திறன்.

ஒரு வேளை அவர்கள் சுவர் என்ற வார்த்தையை “சுவறு” என நினைத்துள்ளார்கள் போலும். அது தவறு.

சுவறு என்றால் அதிகமான சூடு எனப் பொருள் வரும்.

#5 எண்ணக்கூடிய பொருட்களுக்கு எத்தனை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்.

எண்ண முடியாதவற்றைக் குறிக்க எவ்வளவு என்ற வார்த்தை உள்ளது.

அநேகமாக யாருமே இவ்வார்த்தைகளைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை, கல்கியைப் போன்ற பெரும் எழுத்தாளர்கள் முதற்கொண்டு.

#6 செல்வந்தர் என்றெல்லாம் தமிழில் வார்த்தை கிடையாது. செல்வம் படைத்தவர் என எழுதலாம்; இல்லையெனில் செல்வர் என விளிக்கலாம். பணக்காரர் என்று எல்லாருக்கும் புரியும்படி சொல்லிவிடலாம். வடமொழி கலந்து பேசுபவராக இருப்பின் தனவந்தர் எனலாம். செல்வந்தர் எனச் சொல்லி தமிழையும் வடமொழியையும் ஒன்றாகக் கொலை செய்ய வேண்டாம்.

#7 கொடிக்கம்பம் என அழகாக அழைக்கலாம். விருப்பமில்லையெனில் த்வஜ ஸ்தம்பம் எனச் சொல்லலாம். ஆனால் கஜஸ்தம்பம் எனக் கூறுவதெல்லாம்….

#8 அரசாங்கம் என்ற சொல் தவறு எனச் சொல்வதற்கே அச்சப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழார்வ எழுத்தாளர்கள் ராஜாங்கம் என்ற வட மொழிச் சொல்லுக்கு இணையாக அரசாங்கம் எனப் பரவலாக எழுதி, சில ஆண்டுகளாக வெளிவரும் அகராதிகளிலும் அதை இடம் பெறச் செய்து விட்டனர். ஆயினும், அரசு என்பதே சரியான வார்த்தை.

அரசு + அங்கம் = அரசங்கம் ஆகுமே அன்றி அரசாங்கம் ஆகாது. அதனால் அப்படியொரு சொல் தமிழில் இல்லை என்பது தெளிவு.

#9 “கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்”. “அழைக்கப்ப்டுகிறார்கள்” சரியா? கண்டிப்பாக இல்லை. ஆங்கிலப் பாணியில் தமிழைப் புரிந்து கொண்டால், இப்படித்தான் புதிது புதிதாகச் சொற்கள் முளைக்கும். எல்லாரும் இக்காலத்தில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் இவை சரியாகிவிடா.

இவ்வார்த்தைகள் சரியென்றால், பின்வரும் வார்த்தைகளையும் நாம் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

“அவர்கள் பார்க்கப்படுகிறார்கள்”

“இவர்கள் கேட்கப்படுகிறார்கள்”

“பணியாளர்கள் ஆணையிடப்படுகிறார்கள்”

“மாம்பழம் சாப்பிடப்படுகிறது”

“நீர் அருந்தப்படுகிறது”

#10 மராட்டியை மராத்தி என எழுதும் அன்பர்களே, நீங்கள் குஜராத்தியை குஜராட்டி என ஏன் எழுதுவதில்லை? சரி, அதுதான் முடியாதென்றால் பிராட்டியையாவது பிராத்தி என எழுதலாம் இல்லையா?

#11 ஆங்கிலம் மூலம் வடமொழி சொற்களைப் படிப்பதால் எத்தனை மனிதர்களின் பெயர்களையும் ஊர்களின் பெயர்களையும் தவறாக எழுதுகிறோம்!

உடனே நினைவுக்கு வரும் சில வார்த்தைகள் – சண்டிகர், சட்டிஸ்கர், குர்கான், நரேந்திர மோடி. பல வருடங்களாகப் பலரும் உபயோகிக்கும் தவறான வார்த்தை – “பண்டிட்”. பண்டித்தை பண்டிட் என எழுதுபவர்கள், பாண்டித்தியம் என்பதை பாண்டிட்டியம் என எழுத்துவார்களோ? பண்டிதர் பண்டிடர் ஆவாரோ?

#12 கொலு – Kolu-வை Golu என்பர்

கோஷ்டம் – Koshtam என்பதை Goshtam என்பர்

துவாரபாலிகாவை துவாரபாலகி என்பர்

தமிழையும் பிற மொழிகளையும் ஒருங்கே ஒழிக்கும் வல்லமை படைத்தோர்.

#13 எனக்குத் தெரிந்தவரை 80களில் பொங்கல் வாழ்த்து அட்டைதான் இருந்தது. “வாழ்த்து” எப்போது “வாழ்த்துகள்” ஆகி பிறகு “வாழ்த்துக்கள்” ஆனதோ. நான் யாருக்காவது வாழ்த்து என்றோ வாழ்த்துகிறேன் என்றோ சொன்னால் திமிர் பிடித்தவன் என்று எண்ணிக் கொள்கின்றனர். சரி! வாழ்த்துக்கள் இலக்கணப்படி சரியா என்று விளக்கப் போவதில்லை. மாறாக “வாழ்த்துக்கள்” என்போருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பின்வரும் சொற்களையும் தாராளமாகப் பயன்படுத்தித் தமிழை வளர்க்கவும்.

பாராட்டுக்கள்

திட்டுக்கள்

சினங்கள்

கோபங்கள்

அன்புகள்

நன்றிகள்

வணக்கங்கள்

பரிதாபங்கள்

#14 அசுரன் வேறு, ராக்ஷஸன் வேறு என்பது பண்டிதர்களெனப் பெயர் வாங்கியவர்களிலும், கோவில்-சிற்பம்-புராணம் ஆகியவற்றைக் கரைத்துக் குடித்தவர்களிலும் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பது நிதர்சனம். நிற்க!

“ர” கரம், “ய”கரம் மற்றும் “ல”கரம் என்ற எழுத்துகளை முதலாகக் கொண்டு சொற்கள் வாரா என்ற இலக்கண விதிப்படி, அவ்வெழுத்துகளுக்கு முன்பாக அகரம், இகரம், உகரம் போன்றவை வரும்.

எடுத்துக்காட்டுகள் – இராமன், இலக்குவன், உரோமம், இராவணன், இலங்கை.

லக்ஷ்மணன் என்பதை இலக்குவன் என எழுதுவதைப் போல, ராக்ஷஸன் என்பது அரக்கன் ஆயிற்று. அசுரனை அரக்கன் என்று அழைக்கலாகாது.

இக்கருத்தை நான் மட்டுமே சொல்வதால் யாரும் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்காக நான் முனைவர் பட்டம் வாங்கிக் கொண்டா கதற முடியும்?

******************************************************************************************************************

So apparently they call it “widening the road” or “building storm water drains” or some fancy name no one cares about. But you know what’s really happening? Goodbye trees! Hello skyscraper-filled waterbodies! And those once-smooth roads? Yeah, good luck driving on them now.

Just great! My supposedly lovely neighborhood has transformed into another one of those urban concrete jungles, just like Mylapore, Mandaveli, and T Nagar. It’s amazing how quickly everything can turn into a chaotic mess, right?

I remember when I first moved here ten years ago, deer sightings and birds chirping were a regular thing. But guess what? Now it’s like finding a needle in a haystack. So lucky to spot this one lonely deer this week after what feels like forever. Yay, progress!
******************************************************************************************************************

True knowledge is not determined by the sheer quantity of facts one knows, but by the ability to impart that knowledge to others in a meaningful way.

******************************************************************************************************************

The other day, someone asked me if I could explain the AI concepts with mythology, as I typically do for explaining management and leadership concepts. Why not? Here is a sample…

Generative Adversarial Networks, or GANs, are a popular type of generative model used in machine learning. These models are based on two neural networks, the generator and discriminator, that compete with each other to produce realistic samples of data.

To explain this concept, let’s turn to the Greek mythology story of Arachne and Athena. In this story, Arachne boasts of her weaving skills and challenges Athena to a competition. Athena, the goddess of wisdom and craftsmanship, accepts the challenge, and both start weaving their tapestries. Athena weaves scenes of her triumphs, while Arachne weaves scenes of the gods’ infidelities and wrongdoings.

In the end, Athena acknowledges the perfection of Arachne’s weaving skills but criticizes her choice of subject matter. Arachne responds by accusing Athena of jealousy towards her superior weaving skills. Athena punishes Arachne’s tapestry and transforms her into a spider as punishment for her arrogance.

The story of Arachne and Athena provides an excellent analogy for GANs. The generator represents Arachne, who is responsible for creating realistic samples of data, such as images or videos. The discriminator represents Athena, who distinguishes between real and fake samples. The generator and discriminator compete with each other similarly to Arachne and Athena, with the generator trying to create realistic samples that the discriminator cannot distinguish from real data.

Ultimately, GANs produce highly realistic samples of data similar to real-world data. These models have numerous applications, from image and video synthesis to music generation and text-to-image conversion.

The story of Arachne and Athena reminds us of the dangers of arrogance and the importance of humility in the face of competition. Similarly, in the field of machine learning, GANs require constant improvement and adjustment to create more realistic samples. By embracing the spirit of competition and continuous improvement, GANs can push the boundaries of what is possible in the world of artificial intelligence.

******************************************************************************************************************

During a recent social gathering, an acquaintance who runs a small firm asked me to explain AI and GAI to him privately. I recalled an analogy I used decades ago to explain Object Oriented Programming and used it again to explain the difference between AI and GAI.

I explained that AI is similar to a librarian who can quickly recommend books based on pre-defined rules such as keywords or categories. The librarian can also suggest books based on what other readers have liked in the past. However, the librarian is limited to recommending books that already exist in the library’s collection.

In contrast, GAI is like an author who can create new books from scratch using their own knowledge and experience. GAI has the ability to generate new solutions or ideas based on its own learning and training. It is not restricted to the existing books in the library but can create new ones tailored to specific needs or situations.

While AI can efficiently recommend solutions based on pre-defined rules, GAI has the potential to create entirely new solutions based on its own intelligence and understanding.

And, as a trainer in the late 90s, I wanted to find an analogy to explain Object Oriented Concepts to my students. This is how I did it:

I used the example of a book as a class. A book serves as a blueprint or a template for creating objects. The author creates the book, which is a class, and it serves as the blueprint for all copies of the book.

The copies of the book can be thought of as objects. Each copy of the book is a distinct object that is created from the class (the original book) and has its own unique properties (such as the page number, cover design, etc.).

Similarly, in programming, a class serves as a blueprint for creating objects. The class defines the properties and behaviors of the objects that can be created from it. Each object created from the class is unique and can have its own properties and behaviors.

Just as the author creates the book once and can make multiple copies of it, a programmer can create a class once and then create multiple objects from it, each with its own unique properties and behaviors.

To conclude, I always believe…

Analogies are powerful tools that can explain complex or abstract ideas by linking them to more familiar concepts. This can make it easier for people to grasp and retain new information. However, choosing the appropriate analogy that will resonate with the audience and accurately convey the intended message is crucial. Creating effective analogies can be challenging, especially for a specific audience or concept. Furthermore, analogies have limitations and can sometimes be inaccurate, so it’s essential to use them carefully and ensure they don’t cause confusion or misunderstandings.

******************************************************************************************************************

Not what you save, but what you spend, is your money!

******************************************************************************************************************

பஸ் ஸ்டாப்பபில் நின்றிருந்தேன்…

பஸ் நின்றது…

ஏறிப் போய் விட்டேன்.

எப்படி என்னுடைய கவிதை? இதிலுள்ள பொருட்சுவையை அறியாதவர்களுக்காக என்னுடைய பொழிப்புரை…

இரண்டு, மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வாங்க வசதியில்லாமல் ஒரு மனிதன் பேருந்துக்காகக் காத்திருப்பது சமுதாயத்தின் வறுமைக் கொடுமையைச் சாடுகிறது. அது முதல் வரி.

நிறுத்தத்தில் பேருந்து நிற்குமா? அது பேருந்து ஓட்டுனரின் தயாள குணத்தைக் காட்டுகிறது. இது இரண்டாவது வரி.

பேருந்தில் அவ்வளவு சுலபமாக ஏறிப் போக முடியுமா? தொங்கிக் கொண்டு போவதற்கே பெரும் பாக்கியம் செய்திட வேண்டுமே. அதனால் மூன்றாவது வரி எனது கற்பனை வளத்தைக் காட்டுகிறது.

மூன்று வரிகளில் மூன்றுவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் படைத்த என்னைத் தமிழ்ப் பத்திரிகைகள் படிக்கும் சமுதாயம் பெருங் கவிஞனென ஒப்புக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

நீங்களும் கவிஞராக வேண்டுமா? மிகவும் எளிது.

உங்கள் நண்பர் ஒருவருடன் ஊர் வம்பைப் பேசவும். அவரும் கண்டிப்பாகப் பதில் சொல்வார். அதை உங்கள் கைப்பேசியில் பதிவு செய்யவும். பின் அதை உரைநடையாக எழுதவும். அந்தக் காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழிக்கவும். கிழிந்த துண்டுகளில் உள்ள வார்த்தைகளைத் தனித்தனி வரிகளாக எழுதவும். 30 வரிகளாக இருந்தால் மூன்று கவிதைகள்; 40 வரிகளாக இருந்தால் நான்கு கவிதைகள். அவற்றை விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பவும். அவர்கள் பிரசுரிப்பார்கள். முடிந்தது கதை. அன்றிலிருந்து நீங்கள் பெருங் கவிஞர்.

******************************************************************************************************************

The most miserable people are those who care only about themselves, understand only their own troubles and see only their own perspective.

******************************************************************************************************************

For a person like me who firmly believes that money is one of the foremost causes of evil in this world…

I always feel dejected whenever I interact with those who cannot think beyond making money. It is hard to imagine the existence of such people who merely survive to earn money and do nothing else.

******************************************************************************************************************

Go to your terrace…look up into the starry sky to realize how insignificant you are…

This is what I would always love to tell the arrogant people. I hate arrogance and the arrogant people to the core.

******************************************************************************************************************

தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகளை அளவுக்கதிகமாகப் பேசுவது, அப்படிப் பேசுபவர்களின் ஆங்கிலப் புலமையைப் புலப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. அவர்களுடைய தமிழறிவின் குறைப்பாட்டையே காட்டுகிறது. அவர்களிடம் எனக்குப் பரிதாபமே தோன்றுகிறது.

******************************************************************************************************************

நான்கு மணிநேரம் பயணித்து, நான்கு மணிநேரம் வரிசையில் நின்று, நான்கு நொடிகளில் அத்தி வரதனைத் தரிசித்தேன்.

மூன்று வேண்டுகோள்கள் விடுத்தேன்; நான்காவது வேண்டுகோளுக்கு முன்பாக இழுத்து வெளியே தள்ளப்பட்டேன்.

2059யில் மீண்டும் நீ வெளியில் வரும்போதாவது இவற்றை நிறைவேற்று.

1) நமது நாட்டு மக்கள் ஒழுங்காகவும் கட்டுக் கோப்புடனும் வரிசையை மதித்து தள்ளு முள்ளில் ஈடுபடாமல் இருக்க அவர்களுக்கு வேண்டிய ஒழுக்க நெறியைக் கற்றுக் கொடு.

2) கூட்டத்தைச் சிறப்பாகச் சமாளிக்கக் கூடிய வகையில் நிர்வாகத் திறனையும் நல்லறிவையும் நிர்வாகத்தினருக்குக் கொடுப்பாயாக.

3) கடவுளுக்கு முன்பு அனைவரும் சரிசமம் என்பதை நிலைநாட்டு. அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் கடவுளுக்கு அருகே பல நிமிடங்கள் அமர வாய்ப்பும், பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு சில நொடிகள் தரிசனமும் நியாயம் தானா?

******************************************************************************************************************

பல ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று அறிஞர்களும் 2-3 ஒளவையார்களும், 3-4 அகத்தியர்களும், 2-3 கபிலர்களும் இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர். சிலர் ஒரு படி மேலே போய் 2-3 வள்ளுவர்கள் இருந்தனர் எனக் கூட ஒரு காலகட்டத்தில் கூறி வந்தனர்.

இவர்கள் ஏன் ஓரிலக்க எண்களில் நிறத்திக் கொண்டனர் எனப் புரியவில்லை. அவர்களுடைய ஆராய்ச்சியை நான் பூர்த்தி செய்கிறேன். . நான் அவர்கள் வழியிலேயே எனது பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்தறிந்த உண்மைகள் –

மொத்தம் 45 ஒளவையார்கள் – கடைசி ஒளவையாருக்கு சுந்தராம்பாள் என்று இன்னொரு பெயரும் இருந்தது.

மொத்தம் 133 வள்ளுவர்கள். ஒவ்வொரு அதிகாரத்தை எழுதியதும் வேறு வேறு வள்ளுவர்.

******************************************************************************************************************

Oh, of course! The moment something’s chaotic and disorganized, we just say, “Oh, it’s run by volunteers.” How convenient! Who needs organization when you can just blame everything on the fact that people are helping out for free, right? Clearly, the concept of being organized just doesn’t apply when you’re volunteering. What a brilliant precedent!
******************************************************************************************************************