ஜெயிலர்

தம்முடைய மகன் நேர்மையற்றவன் என்பது தெரிந்தவுடன் வேதனையில் சத்தம் போட்டுச் சிரிப்பாரே ! அதற்கு ஆயிரம் ஆஸ்கர்களை அள்ளித் தரலாம்.

சட்டை, பேண்ட், பெல்ட் என சகலத்தையும் அணிந்து கொண்டு பூஜையறையில் இவர் பூஜை செய்யும்விதம் யாருமே யோசிக்காத புதுமை.

நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் வில்லன் இவர் குடும்பத்தைக் குறி வைக்க, கூலாக இவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்து, பின் அந்த மருத்துவரை மிரட்டி, அந்த மருத்துவமனையிலேயே “பாதுகாப்பாக” தம்முடைய குடும்பத்தை மறைத்து வைப்பது என்பதெல்லாம் சும்மா அதிரடி…மாஸ்….தலைவர் வேற லெவல்.

எல்லா ஆயுதங்களையும் இயக்கத் தெரிந்த, நாட்டிலுள்ள எல்லா ரவுடிகளும் கடவுளாக மதிக்கும் மிரட்டலான ஜெயிலர் தம்முடைய குடும்பத்தை மட்டும் தாம் அப்பாவி என நம்ப வைப்பதில் தெரிகிறது இவருடைய கில்லாடித்தனம்.

யோகி பாபுவுடன் இவர் அடிக்கும் லூட்டி….அதான் அந்த இருண்ட நகைச்சுவை….நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய வரலாறு. சிரித்து சிரித்து நமக்கு வயிறு புண்ணாகிவிட்டது.

சிறைச்சாலையில் பிடிக்காதவன் காதை வெட்டுவது, பிடித்தவனுக்கு பீடி வாங்கித் தருவது என்று இதுவரை தமிழ் சினிமா உலகம் காணாத நேர்மையான போலீஸ்காரராக தலைவர். சான்ஸே இல்லை…..

ஒரே ஒரு குறை….இப்படத்தின் தலைப்பு பொருந்தவில்லை…..ரத்தக் காட்டேரி…..என்று தலைப்பு இருந்திருக்க வேண்டும்.

இன்னும் சொல்றதுக்கு நிறைய இருக்கு…..டைப் பண்ணி பண்ணி கை வலிக்குது……