பாரதி விஜயம்

பாரதியைப் பற்றி ஆராய்ந்து எழுதும் ஆசை எனக்கிருந்தது. “பாரதி விஜயம்” என்ற நூலின் இரண்டு தொகுதிகளையும் படித்த பிறகு, அத்தகைய முயற்சியில் நான் இறங்காதது நல்லதாகப் போயிற்று என்று நினைக்கிறேன். ஏனெனில், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் என்கிற இந்நூலின் பதிப்பாசிரியர் சாதித்ததில் நூறில் ஒரு பங்கைக் கூட என்னால் சாதித்திருக்க முடியாது. என்ன அற்புதமான உழைப்பு? ஒருவருடைய சுய சரிதையை எப்படி ஆராய வேண்டும் என்பதற்கு இந்நூல் சிறந்த உதாரணம். ஆசிரியரின் நீண்ட முன்னுரையைப் படிக்கும்போது, இவருடைய ஆர்வமும், அதன் காரணமாக இவர் உழைத்த உழைப்பும் நமக்குப் புலப்படுகின்றன. ஒரு தனி மனிதரால் இதைச் சாதிக்க முடிகிறதென்பதே பெரும் வியப்பாக உள்ளது. ஆசிரியரின் பொறுமை, தேடல், ஆர்வம், வரலாற்று அறிவு எல்லாம் பாராட்டுக்குரியவை.

இந்த நூலாசிரியர் தமிழ் வாசகர்களுக்கும், வரலாற்றுக்கும், பாரதி அன்பர்களுக்கும் பேருதவியும் சேவையும் புரிந்துள்ளார்.