கடுவா – மலையாள மொழியில் ஒரு தெலுங்குப் படம்.
இல்லாத முறுக்கு மீசையை முறுக்கிக் கொண்டு, வேட்டியை ஸ்டைலாக வரிந்து கட்டிக்கொண்டு, அது அவிழாமல் எப்படி எல்லா வில்லன்களையும் பிருத்விராஜ் துவம்சம் செய்கிறார் என்பதே முழுப் படத்தின் கதை.
சும்மா சொல்லக் கூடாது. பிருத்விராஜ் நன்றாகவே நடித்துள்ளார். வேறு என்ன செய்ய? வில்லனாக வரும் விவேக் ஓபராய்க்கும் சேர்த்து நடிக்க வேண்டாமா? விவேக்கின் நடிப்புத் திறனுக்குத் தமிழில் சுலபமாக ஹீரோவாக நடித்து பெரிய ஆள் ஆகலாம். மனிதர் எந்த நடிப்புக் கல்லூரியில் படித்திருப்பாரோ?
மலையாள சினிமா உலகம் முன்னேறி வருகிறது. தெலுங்கு, கன்னடப் படங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்கக்கூடும். ஜாக்கிரதை. (இந்த ஜாக்கிரதை மற்ற மொழிப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கில்லை – ரசிகர்களுக்கு ).