Beast

ஏன்டா தீவிரவாதிகளா? இவ்வளவு செலவழிச்சு தமிழ் எல்லாம் கத்துக்கிட்டு சென்னைலே ஒரு mallஐ hijack பண்றீங்க…நம்ம தளபதி உள்ளாற இருக்கும்போதா பண்ணுவீங்க…..இப்ப பாரு…..உங்களுக்கும் பிரச்னை…..படம் பார்த்த எங்களுக்கும் சோதனை.

ஒத்தை ஆளா நூறு பேரை சமாளிக்கிற பலம்….

துப்பாக்கி குண்டை கத்தியால தட்டி விடற தெனாவட்டு…

காஷ்மீர் தீவிரவாதிகளை தமிழ் கத்துக்க சொல்ற விவேகம்…

பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் பங்களாதேஷ் தீவிரவாதி என நம்ப வைக்கும் சாதுரியம்…

தெருவுல போற ரெண்டு பேருக்கு குயிக்கா சுட கத்துக்கொடுத்து அவங்கள விட்டு தீவிரவாதிகளை காலி பண்ற தில்…

அர்த்தம் புரியாத பாட்டுக்கு உட்சாகமா டான்ஸ் ஆடற சகிப்புத்தன்மை…

ஒத்த ஆளா கவர்ன்மெண்டுக்கு தெரியாம ஆப்கானிஸ்தான் போய் தீவிரவாதியை தூக்கற கெத்து…

வர்ற வழில பாகிஸ்தான் விமானங்களை தகர்த்தெறியும் திறமை…

சும்மா சொல்லக் கூடாது….ஒத்தை ஆளா விஜய் இந்தப் படத்தை தூக்கிப் பிடிக்கிறாப்ல…..