Vikram

கதாபாத்திரங்களுக்கேற்ப உடலை வருத்திக்கொண்டோ, உடல் மொழியை மாற்றிக் கொள்ளும் நடிகர்களைப் பார்த்திருப்போம். ஆனால் எந்தப் படம் என்றாலும் எந்த வேடம் என்றாலும் இந்த விஜய் சேதுபதியைப் போல சரியாகப் பொருந்துபவர்கள் யாரும் இருக்க முடியாது. மனிதர் சற்று கூட அலட்டிக் கொள்வதில்லை. ஒரே மாதிரி தொப்பை வயிறு, ஒரே மாதிரி நடை, ஒரே மாதிரி கொச்சை வசனம் பேசும் முறை, ஒரே விதமான நடிப்பு. இந்தப் படத்தில் அவர் காட்டும் ஒரே வித்தியாசம் முதுகு முழுதும் குத்தியுள்ள பச்சை மட்டும் தான்.

இவர் பயங்கர வில்லனா காமெடி வில்லனா எனக் கடைசி வரை புரியவில்லை. முகம் தெரியாத ஆட்களிடம் சுலபமாக அடி வாங்குவார். ஆனால் அதி சாமர்த்தியசாலியான ஹீரோவை வெளுத்து வாங்குவார். என்னதான் அடி வாங்கி விழுந்தாலும் தாம் அணிந்துள்ள கண்ணாடி விழாமல் பார்த்துக்கொள்ளும் கெட்டிக்காரர். படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாத குறை தீர்க்க இப்படி ஒரு கேரக்டர்.

படத்தின் நீளம் அதிகம். படத்தில் நடித்துள்ள துணை நடிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் வன்முறைக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். ஊர் உலகத்தில் என்னவெல்லாம் ஆயுதம் உண்டோ அதை எல்லாம் இப்படத்தில் பார்க்கலாம்.

கடைசியில் வரும் சூர்யாவைப் பார்த்து பயம் வரவில்லை; சிரிப்புதான் வருகிறது. விஜய் சேதுபதிக்குச் சரியான போட்டி.

இந்தக் குறைகளையெல்லாம் தாண்டி, படம் நன்றாக உள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை. வேற லெவல் கமலைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன. அரசியலை மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்கா நடிக்கிற வேலையை மட்டும் இவர் பார்க்கலாம்.