சஞ்சாரம்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தைப் படிக்கும்போது நான் எனக்குள் பேசிக் கொள்வதைப் போன்ற பிரமை தோன்றும். இது பல வாசகர்களுக்கும் தோன்றியிருக்குக் கூடும். அதுதானே இந்த எழுத்தாளரின் வெற்றி.

பக்கிரி என்ற ஒரு நாதஸ்வரக் கலைஞனின் வாழ்க்கையின் ஊடாகப் பல கரிசல் நிலக் கலைஞர்களின் சோகக் கதைகளை எடுத்துரைக்கும் புத்தகமிது. மாலிக் காபூரிலிருந்து இன்றைய கரகாட்டக்காரி வரை பலருடைய கதைகளும், கரிசல் நிலத்தின் சரித்திரமும், ஜாதிக் கொடுமைகளும், நாதஸ்வரக் கலைஞர்களின் அவல நிலைமையும் உணர்ச்சிகரமாகப் பின்னப்பட்டுள்ளன. ராமகிருஷ்ணனைக் கேட்கவா வேண்டும்? அவர் ஒரு பிரமாதமான கதைச் சொல்லி. இப்புத்தகத்துக்குச் சாகித்திய அகாடெமி விருது கிடைத்ததில் வியப்பில்லை.