பார்த்தீனியம்

சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, தமிழ் நதி எழுதிய “பார்த்தீனியம்” நாவல். தமிழ் இலக்கிய உலகின் யுத்த காலப் படைப்புகளில் இதற்கு முக்கியமான இடம் எப்போதுமே இருக்கும்.

வியத்தகு திறன் படைத்தவர் தமிழ் நதி. யுத்த கால அவலங்களை, தனி மனித வாழ்வியலின் சுக, துக்க, கோப, தாபங்களுடன் கூடிய காதலை, எளிமையாகச் சொல்லி, அதனூடே வரலாற்றையும் திறம்பட புகுத்தியுள்ளார். புத்தகம் முழுவதும் நிரம்பி வழியும் இலங்கைத் தமிழ் வசீகரிக்கிறது.